இந்நிலையில் இதே சர்வ தரிசனத்திற்காக திருப்பதியில் 9 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்தில் என சுமார் 91 கவுன்டர்களில் 10, 11, 12ம் தேதிகளுக்கான டிக்கெட்கள் 8ம் தேதி காலை முதல் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு 13ம் தேதி முதல் வழக்கம்போல் அந்தந்த நாட்களுக்கு உண்டான சர்வ தரிசன இலவச டோக்கன்கள் தற்போதுள்ள சினிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்பளக்ஸ் ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த டோக்கன் பெற்ற பக்தர்கள் மற்றும் ₹300 சிறப்பு நிழைவு தரிசன டிக்கெட், வாணி டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே இந்த 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்கான 1.40 லட்சம் டிக்கெட் 25 நிமிடத்தில் முன்பதிவு appeared first on Dinakaran.