மணாலியில் கடும் பனிப்பொழிவு: அடல் சுரங்கப்பாதையில் நெரிசல்


மணாலி: இமாச்சல பிரதேசத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் மணாலி அடல் சுரங்கப்பாதையில் 1,000 வாகனங்கள் நீண்ட நேரம் சிக்கித் தவித்தன. இமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்றைய தினம் அங்கு வெப்பநிலை மைனஸ் 7 டிகிரியாக பதிவானது. எங்கு பார்த்தாலும் பனி சூழ்ந்து காணப்பட்டது. அடர் பனிப்பொழிவால் ரோஹ்டாங் சோலாங், அடல் சுரங்கப் பாதையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கின. அதில் இருந்த 700க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

வாகனங்கள் எங்கும் நகரமுடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டதால், போலீசார் அவற்றை ஒழுங்குபடுத்தும் பணியில் இறங்கினர். உள்ளூர் மக்களும் போலீசாருக்கு உதவி செய்தனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இமாச்சல பிரதேசத்தில் குவிந்துள்ளதால் சிம்லா, மணாலி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகின்றன. கடுமையான பனிப்பொழிவு காரணமாக சோலாங் நாலா மற்றும் அடல் சுரங்கப்பாதைக்கு இடையில் சுமார் 1000 வாகனங்கள் சிக்கியுள்ளன. இரவு முழுவதும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்தது.

பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ெமதுவாக வெளியேற்றப்பட்டன. அடல் சுரங்கப்பாதையைச் சுற்றியுள்ள வெப்பநிலை மைனஸில் உள்ளது. சில பகுதிகளில் சூரிய ஒளி இல்லை; பனி சூழ்ந்து காணப்படுவதால் சில வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் மீட்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The post மணாலியில் கடும் பனிப்பொழிவு: அடல் சுரங்கப்பாதையில் நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: