சாலையோரம் நிறுத்தியிருந்த கேரவனில் 2 உடல்கள் மீட்பு: கேரளாவில் பரபரப்பு


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பொன்னானி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமாக சுற்றுலா கேரவன் உள்ளது. கடந்த 2 தினங்களாக இந்த கேரவன் கோழிக்கோடு அருகே உள்ள வடகரையில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை பார்த்ததும் சந்தேகம் அடைந்த அந்த பகுதியினர் வேனை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் 2 பேர் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் வடகரை போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அவர்களது உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது ஒருவர் கேரவனின் டிரைவர் மலப்புரத்தை சேர்ந்த மனோஜ் என்பதும், இன்னொருவர் ஊழியர் காசர்கோட்டை சேர்ந்த ஜோயல் என்பதும் தெரியவந்தது. கேரவனில் ஏசி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. இதில் இருந்து வெளியான நச்சுப் புகையை சுவாசித்ததால் தான் 2 பேரும் இறந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வடகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையோரம் நிறுத்தியிருந்த கேரவனில் 2 உடல்கள் மீட்பு: கேரளாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: