ஆனால், எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் மோடிக்கும் எம்ஜிஆருக்கும்.ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறு கண்ணில் சுண்ணாம்பும் என பாஜக இருக்கிறது. சிறுபான்மையினரை ஒரு மாதிரியும், மற்றவர்களை ஒரு மாதிரியும் பாஜக பார்க்கிறது. பாஜகவை போல் எம்ஜிஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை.அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்ஜிஆர். பாஜகவின் கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவதுதான். அவருடன் மோடியை ஒப்பிடலாமா? சமூக நீதிக்காக மோடி என்ன செய்தார்?. எந்த நிலையிலும் எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிட முடியாது. எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது,”இவ்வாறு கூறியுள்ளார்.
The post எம்.ஜி. ஆருடன் மோடியை ஒப்பிடுவதா?.. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் இருவருக்கும் : அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!! appeared first on Dinakaran.