கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர் இயேசு பெருமான். இயேசு காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அனைத்து மதம், மொழி பேசுவோரும், நல்லிணக்கத்தோடும் சமஉரிமையோடும் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழும், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியம் முதலிய பல நலதிட்டங்களை செய்து வருகிறோம். ஏராளமான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: