திருச்செங்கோடு அருகே சிறுவர்கள் உள்பட 25 பேரை துரத்தி கடித்த தெருநாய்

*மருத்துவமனையில் சிகிச்சை

திருச்செங்கோடு : திருச்செங்கோடு அருகே, சிறுவர்கள் உள்பட 25 பேரை தெருநாய் துரத்தி கடித்ததில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எட்டிமடைப்புதூர், ராஜீவ் நகர், கோம்பை நகர், வேல்முருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 25க்கும் மேற்பட்டவர்களை தெருநாய் கடித்தது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையும் துரத்தி துரத்தி கடித்தது.

கடிபட்டவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு வெள்ளை நிறத்திலான அந்த நாய் கடித்ததில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 25 பேர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். அந்த நாயை விரைந்து பிடிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: