ஊட்டி படகு இல்லத்தில் கோடை சீசனுக்காக பழுதான படகுகள் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி படகு இல்லத்தில் கோடை சீசனுக்காக பழுதான படகுகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனான மே மாதம் வரை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அரசு விடுமுறை, தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் அதிகமாக இருக்கும்.

தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதாலும், புனித வெள்ளி, ஈஸ்டர் மற்றும் வார விடுமுறை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்ததாலும், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அடுத்த மாதம் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கை மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து சுற்றுலா தலங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காக்களில் உள்ள விளையாட்டு சாதனங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால், அவர்கள் ஊட்டி ஏரியில் தடையின்றி படகு சவாரி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள பழுதடைந்த படகுகள் சீரமைக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் நடைபாதை சீரமைப்பு, மழை நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: