சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை: கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

 

சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நகரம் முழுவதும் வானம் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை அண்ணா நகர், ஷெனாய் நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, சென்னையில் தியாகராயர் நகர், மேற்குமாம்பலம், வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், அபிராமபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை அடுத்த திருவேற்காட்டில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிற்பகல் 1 மணி வரையிலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: