தலைமறைவு குற்றவாளி கஞ்சா வழக்கில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தலைமறைவு குற்றவாளி கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அந்த குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் தாலுகா போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்துபணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் பிரேம் என்கிற கருப்பன் (30) என்பவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.இந்நிலையில், செங்கல்பட்டை விட்டு வேறு மாவட்டத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இதனை தொடர்ந்து, பிரேம் மீண்டும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரிவதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைமத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், செங்கல்பட்டு பழவேலி மூங்கிலம்மன் கோயில் அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரை மடக்கி பிடித்தபோது விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தலைமறைவு குற்றவாளி கஞ்சா வழக்கில் கைது appeared first on Dinakaran.

Related Stories: