அப்போது 3 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு சாப்பிட்ட பிரியாணிக்கு கடை ஊழியர் பணம் கேட்டுள்ளார். அதற்கு சுந்தரம் ‘யாரிடம் பணம் கேட்கிறாய்…. தினமும் நீ தான் எனக்கு ரூ.10 ஆயிரம் பணம் தர வேண்டும்’ என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், கடை ஊழியரை அவரது காலில் விழ வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் ரோஷன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சுந்தரம், ஆனந்தகுமார், ரவுடி நரேந்தர் ஆகியோரை கைது செய்தனர்.
The post சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்ட கடை ஊழியரை தாக்கிய ரவுடி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.