இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் ஒருவர் நேற்று இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் வந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வாங்கியிருப்பது தெரியவந்ததால், நீதிமன்றத்திற்குள் போலீசார் அவரை அனுமதித்தனர். இந்த சம்பவத்தால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஆரணி கோர்ட்டுக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த வழக்கறிஞர் appeared first on Dinakaran.