திருமணம் செய்வதாக சென்னை பெண் இன்ஜினீயர் உள்பட 10 இளம்பெண்களை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது

* ஆபாச வீடியோ, போட்டோ வெளியிடுவதாக மிரட்டி பணம், நகைகள் பறித்ததும் அம்பலம்

மயிலாடுதுறை: திருமணம் செய்வதாக ஏமாற்றி சென்னை பெண் இன்ஜினீயர் உள்பட 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பலாத்காரம் செய்ததுடன் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து அவற்றை வெளியிடுவதாக மிரட்டி பணம், நகைகளை பறித்த காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறையை சேர்ந்தவர் ஜாகிர்ஹூசைன்(23). இவருக்கு, மயிலாடுதுறையை சேர்ந்த 29வயதான, சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் பிஇ பட்டதாரி பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது பின்னர் காதலானது.

ஜாகிர்ஹூசைன், அந்த பெண்ைண திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரிடமிருந்து 14 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை பறித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதோடு, அதை தனது செல்போனில் வீடியோ, போட்டோ எடுத்துள்ளார். பின்னர் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி, அந்த பெண்ணை ஜாகிர்ஹூசைன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அந்த பெண் கர்ப்பமடைந்தார்.

இது தெரிந்த ஜாஹூர் உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்ெபண்ணை வீட்டுக்கு வரவழைத்து கட்டாய கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவர், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பாதிக்கப்பட்ட ெபண்ணின் மீதே குற்றம்சாட்டி பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இளம்பெண்ணுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன் நேற்றுமுன்தினம் மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக டிஎஸ்பி பாலாஜி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து போலீசார், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவது, பாலியல் துன்புறுத்துதல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஜாகிர் ஹூசைனை கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் மயிலாடுதுறை நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி முன் நேற்றுமுன்தினம் இரவு ஜாகிர்ஹூசைன் ஆஜர்படுத்தப்பட்டு, மயிலாடுதுறை சிறையிலடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜாகிர் ஹூசைனால் பாதிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த மற்றொரு 28வயதான இளம்பெண், செல்போன் மூலம், தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசி அந்த வீடியோவை போலீசுக்கு அனுப்பி புகார் அளித்தார். ஜாகிர் ஹூசைன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அவர் 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களை திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்துள்ளதாகவும், அவர்களும் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணமான இளம்பெண்களையும் வலையில் வீழ்த்தியதோடு, உல்லாசமாக இருந்துவிட்டு அந்த ஆபாச வீடியோ, போட்டோக்களை வெளியிடுவதாக மிரட்டி அவர்களிடமும் பணம், நகைகளை பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோல் எத்தனை பெண்களை அவர் ஏமாற்றி நகை, பணம் பறித்தார் என்பது குறித்து விசாரிக்க ஜாகிர்ஹூசைனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருமணம் செய்வதாக சென்னை பெண் இன்ஜினீயர் உள்பட 10 இளம்பெண்களை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது appeared first on Dinakaran.

Related Stories: