இதனிடையே அந்த பெண்ணின் முதல் கணவனுக்கு பிறந்த 13 வயது மகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமியை கெலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த பெண் அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், அந்த சிறுமி ஒன்றரை மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், சிறுமியிடம் விசாரித்தபோது அவரது 2வது கணவன் மணி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ததும், அதனால் அந்த சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த பெண் தனது 2வது கணவன் மீது போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆனால், இந்த சம்பவம் குறித்து மருத்துவ அலுவலர் ராஜேஷ் இதுகுறித்த புகாரின்பேரில் மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்த ேபாலீசார் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை appeared first on Dinakaran.