திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குளத்தில் 3 பேரின் உடல்கள் மீட்பு..!!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே குளத்தில் இருந்து 2 இளைஞர்கள் உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் முன்பு காணாமல் போன குறிச்சிச்கோட்டையை சேர்ந்த பள்ளி மாணவி தர்ஷனா உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் (20), தர்ஷனாவின் உறவினர் மாரிமுத்து (20) ஆகியோரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டது.

மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது குளத்தில் தவறி விழுந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்ததாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 3 பேரின் உடல்களை கைப்பற்றி அமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணைநடத்தி வருகின்றனர்.

The post திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குளத்தில் 3 பேரின் உடல்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: