முன்னாள் அமைச்சர் அம்மமுத்து, தனது மருத்துவமனைக்கு டாப்ளர் ஸ்கேன் வாங்குவதற்காக போலி ஆவணங்களை கொடுத்து மோசடியாக கடன் பெற்றது உறுதியானதால் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி எஸ்.சண்முகவேல் நேற்று தீர்ப்பளித்தார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்து, வங்கி தலைமை மேலாளர் பாலசுப்ரமணியன், மகாலிங்கம் ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், கல்யாணசுந்தரம் என்பவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post வங்கி கடன் மோசடி வழக்கில் அதிமுக மாஜி அமைச்சருக்கு சிறை: சிபிஐ நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.