புதுக்கோட்டை ஆவுடையார் கோயில் சொத்து மோசடி: ஆவணங்களை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: புதுக்கோட்டை ஆவுடையார் கோயில் காலசந்தி கட்டளை சொத்துகளை மோசடியாக விற்ற அனைத்து ஆவணங்களையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை ஏமாற்றி உத்தரவு பெற்று மோசடியாக விற்பனை செய்த அனைத்து ஆவணங்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. ஆவுடையார் கோயில் சிறு காலசந்தி கட்டளை மற்றும் கட்டளையின் சொத்துகளை இனி உரிமை கோர முடியாது உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. காரைக்குடி அருகே நேமத்தான்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

The post புதுக்கோட்டை ஆவுடையார் கோயில் சொத்து மோசடி: ஆவணங்களை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: