சென்னையில் இருந்து 156 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு

சென்னை: சென்னையில் இருந்து 156 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் அவசர அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தமான் செல்ல இருந்த 148 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 156 பேரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.விமானம் பழுதுபார்க்கப்பட்டு, தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று விமான நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் இருந்து 156 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு appeared first on Dinakaran.

Related Stories: