வளைகுடா நாடான குவைத்தின் மன்னர் ஷேக் மெஷல் அல் – அஹ்மத் அல் – ஜாபர் அல் சபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி டிசம்பர் 21, 22 (இன்றும், நாளையும்) குவைத் நாட்டுக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது குவைத் தலைமை அதிகாரிகள், இந்திய சமூகத்தினருடன் மோடி கலந்துரையாடுவார்.
மோடியின் இந்த பயணம் இந்தியா, குவைத் இடையேயான பன்முக உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும். இவ்வாறு வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்குமுன் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1981ம் ஆண்டு குவைத் நாட்டுக்கு சென்றார். அதன்பிறகு தற்போதுதான் இந்திய பிரதமர் மோடி குவைத் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி இன்று குவைத் பயணம் appeared first on Dinakaran.