பகுதி 2ல் வகைப்படுத்தப்பட்டுள்ள வரையறைக்கு முரணாக 5 மதிப்பெண் கேள்விகளை 2 மதிப்பெண் கேள்விளாக கேட்கப்பட்டுள்ளன. கண்டிப்பாக விடை எழுத வேண்டிய கேள்வி எண் 30, முற்றிலும் தவறாக இருந்தது. பகுதி 3ல் 31, 33, 35, 37, 39 ஆகிய 5 கேள்விகள் வகைப்படுத்தப்பட்டுள்ள வரையறைகளின் படி 5 மதிப்பெண் கேள்விகளாகும். மொத்தம் உள்ள 10 கேள்விகளில் 3 கேள்விகள் மட்டுமே முறையாக 3 மதிப்பெண் கேள்விகளாக கேட்கப்பட்டுள்ளன.
மேலும் கண்டிப்பாக விடையளிக்க வேண்டிய கேள்வி எண் 40 உருவாக்கப்பட்டு கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கேள்வி எந்த வகை சார்புக்கு விடையளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. தவறுகள் நிறைந்த கேள்விகள் இடம்பெற்றால் அது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
The post பிளஸ் 2 அரையாண்டு தேர்வு கணக்கு பாடத்தில் குளறுபடி: மாணவர்கள் குழப்பம் appeared first on Dinakaran.