இரட்டை இலை சின்னம் தொடர்பான புகார் மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அவகாசம் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: அதிமுக தொடர்பாக, நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் தனக்கு வழங்கப்படாத நிலையில், தனது கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வார கால அவகாசம் வழங்கக் கோரி சூரிய மூர்த்தி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, நீதிமன்றம் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்று கூறி மனு மீது முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்க மறுத்து சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post இரட்டை இலை சின்னம் தொடர்பான புகார் மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அவகாசம் கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: