மண்டபம் மீனவர்கள் 8 பேருக்கு டிச.27 வரை காவல் நீடிப்பு

மண்டபம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் துறைமுகம் கடலோரப்பகுதியில் இருந்து டிச.8ம் தேதி மீன் பிடிக்க சென்ற கார்த்திக் ராஜ் மற்றும் சகாய ஆண்ட்ரோஸ் ஆகிய இருவரின் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இதிலிருந்த, 8 மீனவர்களையும் கைது செய்தனர்.

அவர்களை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி சாலினி, டிச.20ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.  யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களையும் நேற்று 2வது முறையாக நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி, 8 பேரையும் டிச.27ம் தேதி வரை சிறைக்காலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post மண்டபம் மீனவர்கள் 8 பேருக்கு டிச.27 வரை காவல் நீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: