இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்தது. இதற்கிடையே சில மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட கூடுதாகவும் இருந்தது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இயல்பைவிட கூடுதலாக 5 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவும், தஞ்சாவூர், கோவை, தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், சென்னை, நீலகிரி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, கோவை, மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்பட்டது.
சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 90 டிகிரி வரை இருக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆந்திரா- ஒடிசா கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும்: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.