இந்தியாவிலேயே முதன்முறையாக 78 வயது நோயாளிக்கு புதிய தொழில்நுட்பத்துடன் அலெக்ரா வால்வு பொருத்தம்: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் முன்னணி இதய சிகிச்சை நிபுணரும், அப்போலோ மருத்துவமனையின் ஸ்ட்ரக்ச்சுரல் ஹார்ட் புரோக்ராமின் தலைவருமான செங்கோட்டுவேலு தலைமையில் இயங்கும் அப்போலோ மருத்துவமனைகள் குழு, இந்தியாவிலேயே முதன்முறையாக புதிய தலைமுறை நுட்பத்திலான அலெக்ரா ட்ரான்ஸ்கதீடெர் ஆர்ட்டிக் வால்வு இம்ப்ளானேஷன் வால்வை நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி இருப்பதன் மூலம் மேம்பட்ட இதய சிகிச்சையில் மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது.

இதற்கு முன்பாக, அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட வால்வு தனது பணியை சரிவர செய்யாமல் தோல்வியுற்ற நிலையில் இருக்கும் வயதான நோயாளிக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் வயதானவர்களின் மக்கள்தொகை வெகுவாக அதிகரித்து வருவதன் காரணமாக, பெருநாடி எனப்படும் ஆர்டிக் வால்வு நோய் தொடர்பான நோய் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. பல நோயாளிகளுக்கு அளிக்கப்படும் முதல் சிகிச்சை முறையாக இதுமுக்கியத்துவம் பெற்று வருகிறது.

நோயாளிகளுக்கான சிகிச்சையில் சாதகமான முடிவுகள் இருந்தபோதிலும், அதிலும் பல சிக்கல்கள் இன்னும் உள்ளன. பயோசென்சர்ஸ் இன்டர்நேஷனல் உருவாக்கிய புதிய அலெக்ரா வால்வு, முதல் தலைமுறை நுட்பத்திலான வால்வுகளின் வரம்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன சுய-விரிவாக்க சாதனமாகும். அப்போலோ மருத்துவமனையின் குழு, 78 வயது நோயாளிக்கு மருத்துவ நடைமுறையை மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த நோயாளி ஏற்கனவே 2015ம் ஆண்டு பயோகார் 21 மி.மீ. மூலம் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவிலேயே முதன்முறையாக 78 வயது நோயாளிக்கு புதிய தொழில்நுட்பத்துடன் அலெக்ரா வால்வு பொருத்தம்: அப்போலோ மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Related Stories: