சென்னை: சென்னை துறைமுகத்தில் காருடன் கடலில் விழுந்த ஓட்டுநரின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவரை அழைத்துச் செல்வதற்காக வந்த முகமது ஷாகி, காரை ரிவர்ஸ் எடுத்தபோது விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.