அதிமுக பொதுச்செயலாளர் பதவி.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதிமுகவில் பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்ததை எதிர்த்தும், பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரியும் அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் ஐகோர்ட்டில் மனு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள்; எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர். நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post அதிமுக பொதுச்செயலாளர் பதவி.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: