தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் 7 நாட்களுக்குப் பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அருவிகளில் நீர்வரத்து சீரானதை அடுத்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.