×

கிருஷ்ணகிரியில் வாலிபர் திடீர் மாயம்

கிருஷ்ணகிரி, டிச.18: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் நதியா. இவரது கணவர் முரளி இறந்து விட்டார். மகன் கோகுல் (18), பிளஸ்2 வரை படித்து விட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள டிவி ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் நதியா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரியில் வாலிபர் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Nadiya ,Tiruvalluvar Nagar ,Pudupettai, Krishnagiri ,Murali ,Gokul ,2 ,
× RELATED அரசு ஊழியர்களின் சொத்து, கடன் குறித்த...