- மங்கி குல்லா
- ஓசூர்
- குருப்பட்டி
- மட்டம் அக்ரகாரம்
- அச்செட்டிப்பள்ளி
- ஜோனபெண்டா
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- தின மலர்
ஓசூர், டிச.27: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே குருபட்டி, மத்தம் அக்ரகாரம், அச்செட்டிப்பள்ளி, ஜொனபெண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் லே அவுட் குடியிருப்புகளை குறி வைத்து, மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். பூட்டி கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பொருட்களை திருடிச்செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஓசூர் அருகே குளோபல் சிட்டி லே அவுட்டில் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் மங்கி குல்லா அணிந்தவாறு நுழைந்த 4 கொள்ளையர்கள், அங்கிருந்து பொருட்களை திருடிச் செல்லும்போது பதிவான சிசிடிவி காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. ஓசூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் தனியார் லேஅவுட்டுகள் புதியதாக உருவாகியுள்ளன. போலீசார் ரோந்து செல்லாத லே அவுட்களில், தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. நள்ளிரவு நேரத்தில் மங்கி குல்லா அணிந்தவாறு கார்களில் வருபவர்கள், வண்டியை ஒதுக்குபுறமாக நிறுத்தி விட்டு, வீடு புகுந்து பொருட்களை திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, ஓசூர் ஏஎஸ்பி, சிறப்பு தனிப்படையை அமைத்து, மங்கி குல்லா கொள்ளையர்களை பிடிப்பதுடன், இரவு ரோந்து போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,’ என்றனர்.
The post ஓசூர் பகுதியில் மங்கி குல்லா கொள்ளையர்கள் அட்டகாசம் appeared first on Dinakaran.