×

சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்

சூளகிரி, டிச.28: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், ஆறுபள்ளி கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமின் 3ம் நாள் சூளகிரி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவர் வெண்ணிலா தலைமையிலான குழுவினர் பங்கேற்று சிகிச்சையளித்தனர். முகாமில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமன், துணைத் தலைவர் தஸ்தகீர், பொதுக்குழு உறுப்பினர் சேகர், செயற்குழு உறுப்பினர் ஜெபாஸ்டின், அமைப்புச் செயலாளர் சுதாகர், பொருளாளர் அஷ்பர், ஊராட்சி தலைவர் லட்சுமி தேவி, ஊர் பிரமுகர்கள் பாலா, லோகேஷ், கணேஷ், கோபி, சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். என்எஸ்எஸ் அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.

The post சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Soolagiri ,Soolagiri Government Men's Secondary School ,Project ,Aaresali ,Government of Sulagiri ,Primary Health Center ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி முதியவர் பலி