ஆந்திராவின் தலைநகர் அமராவதியில் 103 ஏக்கரில் சட்டப்பேரவை கட்டிடம்: அடுத்த 3 ஆண்டுகளில் முடிக்க திட்டம்

திருமலை: அமராவதியில் 103 ஏக்கரில் சட்டப்பேரவை கட்டிடம் கட்டப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆந்திராவில் அமராவதி தலைநகர் என்பது முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவு திட்டமாக உள்ளது. இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது: அமராவதியில் தலைநகர் கட்டமைப்பை உருவாக்க மொத்தம் ரூ.45,249.24 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 103 ஏக்கரில் 250 மீட்டர் உயரத்தில் 11.22 லட்சம் சதுர அடியில் சட்டப்பேரவை கட்டப்படும்.

உயர் நீதிமன்ற கட்டிடம் 20.32 லட்சம் சதுர அடியில் 42 ஏக்கரில் 55 மீட்டர் உயரம், 8 தளங்களுடன் ரூ.1048 கோடி செலவில் கட்டப்படும். இதேபோல் (ஜிஏடி) பொது நிர்வாக துறை கட்டிடம் 17.03 லட்சம் சதுர அடி மற்றும் 47 தளங்களுடன் கட்டப்படும்.இதுதவிர ரூ.4,688 கோடி செலவில் 68.88 லட்சம் சதுர அடியில் மொத்தம் 5 டவர்கள் கொண்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்படும். வரும் திங்கட்கிழமைக்குள் டெண்டர் கோரும் பணி தொடங்கும். 3 ஆண்டில் பணி முடிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

The post ஆந்திராவின் தலைநகர் அமராவதியில் 103 ஏக்கரில் சட்டப்பேரவை கட்டிடம்: அடுத்த 3 ஆண்டுகளில் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: