விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை மாநிலங்களிடையே தண்ணீர் பிரச்னைக்கு காங்கிரசே காரணம்: பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு

ஜெய்பூர்: மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பிரச்னை ஏற்பட காங்கிரஸ்தான் காரணம் என மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜ அரசு பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த ‘ஓராண்டு ஆட்சி – சிறந்த வளர்ச்சி’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் தொடர்பான ரூ.46,400 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “விவசாயிகள் நலன் பற்றி பெரிதாக பேசும் காங்கிரஸ் விவசாயிகளுக்காக எதையும் செய்யாமல், மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பிரச்னையை ஏற்படுத்தி வந்தது. கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் காலதாமதம் காங்கிரசின் நோக்கத்துக்கு நேரடி ஆதாரம். பாஜவின் கொள்கை பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பது. காங்கிரசின் கொள்கை மாநிலங்களிடையே தண்ணீர் பிரச்னையை ஊக்குவிப்பது. பாஜவின் கொள்கை மோதல் அல்ல, உரையாடல். பாஜ ஒத்துழைப்பை நம்புகிறது. எதிர்ப்புகளை அல்ல. பாஜ இடையூறு செய்வதை நம்பவில்லை. தீர்வுகளை நம்புகிறது” என்று தெரிவித்தார்.

The post விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை மாநிலங்களிடையே தண்ணீர் பிரச்னைக்கு காங்கிரசே காரணம்: பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: