செங்கோல் நேருவின் வாக்கிங் ஸ்டிக்: ஒன்றிய அமைச்சர் பேச்சால் அமளி

புதுடெல்லி: மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. நேற்று ஒன்றிய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேசும்போது, ‘சுதந்திரம் அடைந்து அதிகார பரிமாற்றத்தின்போது செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோல் நீதியின் சின்னமாக இல்லாமல் ஜவஹர்லால் நேருவின் வாக்கிங் ஸ்டிக்காக கருதப்பட்டது’ என்றார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. உடனே இதில் குறுக்கிட்ட அவை முன்னவர் ஜேபி நட்டா, ‘சோழ சாம்ராஜ்ஜியத்தில் நிலவிய செங்கோல் மூலமாக அதிகாரத்தை மாற்றும் பாரம்பரிய முறை பற்றி சி. ராஜகோபாலாச்சாரி தெரிவித்துள்ளார்.
செங்கோல் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கொண்டு வரப்பட்டு சடங்கு மூலமாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நேருவிடம் அவரது இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் அது ஆனந்த பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு அது நேருவின் வாக்கிங் ஸ்டிக் என்று எழுதப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது’ என்றார். இதற்கு எதிர்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.

The post செங்கோல் நேருவின் வாக்கிங் ஸ்டிக்: ஒன்றிய அமைச்சர் பேச்சால் அமளி appeared first on Dinakaran.

Related Stories: