இதையடுத்து விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, மீண்டும் சென்னைக்கு விமானத்தை திருப்பினார். அதோடு சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தன. இந்த விமானம் நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக வந்து தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 136 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post நடுவானில் இயந்திர கோளாறு கோவைக்கு புறப்பட்ட விமானம் சென்னையில் தரையிறக்கம் appeared first on Dinakaran.