நாகூர் இ.எம்.ஹனிபா பங்களிப்பை போற்றி பெருமை சேர்க்கும் வகையில், நாகப்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு ‘இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா தெரு’ என்றும், சில்லடி கடற்கரைக்கு செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கு ‘இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா’ என்றும் பெயரிட்டு அழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், நாகூர் ஹனிபா குடும்பத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
* நெஞ்சில் ஒலிக்கும் குரல் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
இசைமுரசு நாகூர் ஹனிபா என்றாலே – “அழைக்கின்றார் அண்ணா” “ஓடிவருகிறான் உதயசூரியன்”-“கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” முதலான பாடல்கள்தான் நம் நெஞ்சில் ஒலிக்கும். அவரது நூற்றாண்டைச் சிறப்பிக்க – நாகை நகராட்சியில் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு “இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா தெரு” என்றும், சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் பூங்கா “இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா” என்றும் பெயர் சூட்டியுள்ளோம். நாகூர்ஹனிபா 100ல் அவரது வாழ்வையும் தொண்டையும் போற்றுவது நம் கடமை.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு தெரு, புதுப்பிக்கப்பட்ட பூங்காவிற்கு நாகூர் ஹனிபா பெயர் appeared first on Dinakaran.