முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸ் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று பார்க்கிறது: அமைச்சர் டிஆர்பி.ராஜா பெருமிதம்

மதுரை: முதலீட்டாளர்கள் முதலில் முதலீடு செய்ய விரும்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று பார்ப்பதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார். தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான டிஆர்பி.ராஜா மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை, திண்டுக்கல், தேனி மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் மிகப் பிரமாண்டமான அற்புதமான ஒரு டைடல் பார்க் கட்டுமான பணிகள் விரைவில் துவங்க இருக்கின்றன. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இது தென்னிந்திய அளவில் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலில் முதலீடு செய்வது தமிழ்நாட்டில் தான். அதற்கு ஏதுவான சூழல் தற்போது நிலவி வருகிறது. மகத்தான தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிக அளவில் ஏற்பட போகிறது. இதன் மூலம் தமிழ்நாடு முதல்வரின் ஒரு டிரில்லியன் டாலர் வர்த்தகம் கனவு நிச்சயம் நிறைவேறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸ் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று பார்க்கிறது: அமைச்சர் டிஆர்பி.ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: