திருச்சி: விழுப்புரம் மாவட்டத்தில் யானை தந்தத்திலான பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை எஸ்ஐக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவர் கடந்த நவம்பர் 25ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தில் எஸ்ஐ மணிவணணன் நேற்று காலை ஆஜரானார். அவரிடம் வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், யானை தந்தத்திலான பரிசு பொருட்களை விற்பனை செய்தது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து மணிவண்ணனை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி யானை தந்த பொருட்களை அவருக்கு வழங்கிய உறவினரான சமயபுரம் அக்கரைப்பட்டியை சேர்ந்த பாஸ்கரனையும் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
The post யானை தந்தத்தில் பரிசு பொருட்கள் விற்ற எஸ்ஐ கைது appeared first on Dinakaran.