கல்பாக்கம் அருகே பரபரப்பு; டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் துளைப்போட்டு மதுபாட்டில்கள், ரூ.7,000 ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கல்பாக்கம் அடுத்த நத்தமேடு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு, பணிபுரியும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்ததும், வழக்கம்போல் கடையினை பூட்விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், நேற்று காலை டாஸ்மாக் கடையினை திறப்பதற்காக வந்தபோது, கடையின் சுவரில் துளைப்போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, கடையில் இருந்து மதுப்பாட்டில்கள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.7 ஆயிரம் ஆகியவை திருடுபோய் இருந்தது. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சதுரங்கப்பட்டினம் போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், டாஸ்மாக் கடையின் சுவரில் 4 மர்ம நபர்கள் துளைப்போட்டு உள்ளே சென்று மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச்செல்வதும் பதிவாகி இருந்தது.அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், டாஸ்மாக் கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி, அவர்களை தேடி வருகின்றனர்.

The post கல்பாக்கம் அருகே பரபரப்பு; டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: