திருட்டு மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு சந்திப்பு வழியாக உரிய நடைச்சீட்டு இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் கனிமம் மற்றும் புவியியல் சுரங்கத்துறை தனித்துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன் செவிலிமேடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டதில் உரிய நடைச்சீட்டு இல்லாமல் 4 யூனிட் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருட்டு மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: