பெட்ஷீட் போர்த்தப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு

அம்பத்தூர்: தாம்பரம் – புழல் புறவழிச்சாலையில், அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் சாலை ஓரமாக, ‘பெட்ஷீட்’ போர்த்தப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்தது. இதுபற்றி அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், சடலமாக கிடந்த பெண்ணிற்கு 55 வயது இருக்கலாம் எனவும், தலை பிளந்த நிலையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இறந்த பெண் சாலை விபத்தால் உயிரிழந்தாரா அல்லது கொலையா என பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post பெட்ஷீட் போர்த்தப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: