திருத்தணி, டிச. 16: திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழைக்கு பெரும்பாலான நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி காணப்படுகிறது. இதில் திருவாலங்காடு ஒன்றியம், பெரிய களக்காட்டூரில் நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி முழுமையாக நிரம்பி உபரி நீர் கடைவாசலில் செல்கிறது. இந்நிலையில், ஏரி மதகு பகுதியில் நீர் கசிந்து வெளியேறுகிறது.
நீர்க்கசிவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து உடனடியாக கிராம மக்கள் நீர் பாசன துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நீர் பாசனத் துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து நேற்று 300க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை ஏரி மதகு பகுதியில் அடுக்கி நீர்கசிவை தற்காலிகமாக அடைத்தனர். மேலும், ஏரிக்கரை பலவீனம் அடைவதை தடுக்கும் வகையில் கரை பகுதியை வலுப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post திருவாலங்காடு அருகே ஏரி மதகில் நீர் கசிவை தடுக்க மணல் மூட்டைகள் appeared first on Dinakaran.