அரைக்க:
பச்சரிசி – ½ கப்
புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி – ½ கப்
துவரம்பருப்பு – ½ கப்
கடலைப்பருப்பு – ½ கப்
பாசிப்பருப்பு – ½ கப்
உளுந்தம் பருப்பு – ½ கப்
வரமிளகாய் – 6-7
சோம்பு – ½ டீ ஸ்பூன்
தேங்காய் – ½ மூடி
அரைத்த பின் சேர்க்க:
சின்ன வெங்காயம் – 15-20
பெருங்காயம் – ¼ டீ ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரை கப் பச்சரிசி மற்றும் அரை கப் புழுங்கல் அரிசி சேர்க்கவும்.புழுங்கல் அரிசிக்கு பதில் நீங்கள் வீட்டில் சாதம் செய்யும் அரிசியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.அதனுடன் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து கொள்ளவும்.அதில் தண்ணீர் சேர்த்து 2 முதல் 3 முறை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பின் அதில் ஊற வைக்க தேவையான தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.அதனுடன் வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் சேர்த்து கொள்ளலாம்.பின் தேங்காயை நறுக்கியோ அல்லது துருவியோ எடுத்து கொள்ளவும்.ஊற வைத்த தண்ணீரை வடிகட்டிவிட்டு தேங்காய் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.அதனுடன் பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 மணி நேரத்திற்கு புளிக்க விடவும்.புளிக்க வைக்காமல் நேரடியாகவும் பயன்படுத்தலாம்.மாவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.உங்களுக்கு வேண்டுமானால் பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து கலந்து கொள்ளலாம்.தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தோசை ஊற்றி எண்ணெய் சேர்த்து வேகவிடவும்.ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான செட்டிநாட்டு தோசை தோசை தயார்.
The post செட்டிநாடு அடை appeared first on Dinakaran.