ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி

தேவையான பொருட்கள்:

தக்காளி – 2 பெரியது அல்லது 4 சிறியது
வரமிளகாய் – 3 -4(காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளவும்)
வெள்ளை எள்ளு – 2 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ¾ டேபிள் ஸ்பூன்
சீரகம் – ½ டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீ ஸ்பூன்
இஞ்சி – ஒரு இன்ச் துண்டு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ¼ டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 1 கொத்து
வரமிளகாய் – 1
சீரகம் – ¼ டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ¼ டீ ஸ்பூன்
பெருங்காயம் – ¼ டீ ஸ்பூன்
பூண்டு – 10-12 பல்

செய்முறை

நன்றாக பழுத்த தக்காளியை தண்ணீரில் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.இஞ்சியை சுத்தமாக கழுவி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.அதனுடன் வரமிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.அதில் எள்ளு மற்றும் சீரகம் சேர்த்து மிதமாக வறுத்து ஆற வைக்கவும்.அதே வாணலியில் தக்காளி, இஞ்சி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.தக்காளி நன்றாக மசியும் வரை வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வதக்கி வாய்த்த வரமிளகாய், உளுந்தம் பரப்பு, எள்ளு, மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும்.அதனுடன் வதக்கி ஆற வைத்த தக்காளி சேர்த்து அரைக்கவும்.தேவைப்பட்டால் சுவைக்கேற்ப உப்பு மற்றும் காரம் சேர்த்து கொள்ளவும்.அதே வாணலியை அடுப்பில் வைத்து தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.அதனுடன் கருவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.அதனுடன் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.இதில் அரைத்து வைத்த தக்காளி சேர்த்து கிளறினால் சுவையாக ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி தயார்!

The post ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி appeared first on Dinakaran.