பூண்டு துவையல்

தேவையானவை:

பூண்டு உரித்தது – 2 கப்,
புளி – எலுமிச்சை அளவு,
காய்ந்த மிளகாய் 10,
கடுகு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
வெல்லம் – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:

பூண்டு, புளி, உப்பு, மிளகாய், வெல்லம் போட்டு நைசாக அரைக்கவும். பின் வாணலியில் நல்லெண்ணெய் அதிகமாக விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் அரைத்ததைப் போட்டு நன்றாக சுருள வதக்க வேண்டும். ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து சாப்பிடலாம். அஜீரணம், வயிற்றுப் பொருமல் அனைத்துக்கும் ஏற்றது.

The post பூண்டு துவையல் appeared first on Dinakaran.