இதனால், அப்பகுதி மக்கள், அங்கு தடுப்பு கட்டைகள் அமைத்து, மணல் மூட்டைகள் கொண்டு தற்காலிக மண் சாலை ஏற்படுத்தி இருந்தனர். இந்நிலையில், தற்போது ஆரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆண்டார்மடம் கிராமத்தில் இருந்து பழவேற்காடு செல்லும் சாலை அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசு சார்பில் ஆண்டார்மடம் கிராமத்திற்கு தற்காலிகமாக படகு வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஆண்டார்மடம் கிராமத்தில் இருந்து பழவேற்காடு, பொன்னேரி, சென்னை என பல்வேறு இடங்களுக்குச் செல்வோர் படகு மூலம் ஆரணியாற்றில் சென்று சாலையை அடைந்து பேருந்திலும், பிற வாகனங்களிலும் செல்கின்றனர். பள்ளி மாணவ, மாணவியர், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துடன் ஆபத்தான முறையில் ஒருவித அச்சத்துடனே படகில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
மேலும், ஆண்டுதோறும் மழை காலத்தின்போது ஆரணியாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டு, பலர் வீடுகளிலேயே முடங்கி பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், ஆற்று வெள்ளத்தில் செல்லும் படகில் பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது ஆபத்தானதாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு, இனி வரும் காலங்களில் மழையால் போக்குவரத்து துண்டிக்காத வகையில் ஆரணியாற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post ஆரணியாற்று வெள்ளத்தால் சாலை துண்டிப்பு; கிராம மக்கள் போக்குவரத்துக்கு தற்காலிகமாக படகு வசதி appeared first on Dinakaran.