இந்தியா கூட்டணிக்கு மம்தா தலைமை ஏற்க உமர் அப்துல்லா எதிர்ப்பு

புதுடெல்லி: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் தன் பேட்டியில், “எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளில் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சி காங்கிரஸ். மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் காங்கிரஸ்தான் எதிர்க்கட்சியாக இருக்கிறது.

வேறெந்த எதிர்க்கட்சிகளும் உரிமை கொண்டாட முடியாத அளவுக்கு இந்தியா முழுவதும் காங்கிரஸ் தடம் பதித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒரு எதிர்க்கட்சி இயக்கத்தின் இயல்பான தலைவர்கள். இந்தியா கூட்டணிக்கு மம்தா பானர்ஜியின் தலைமை என்பது தேர்தல் நேரத்துக்கான ஒரு ஏற்பாடாக மாறி விடும். எனவே இந்தியா கூட்டணிக்கான தலைமை பொறுப்பை காங்கிரஸ் சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. காங்கிரஸ் தன் செயல்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்து தலைமை பொறுப்பில் நீடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

The post இந்தியா கூட்டணிக்கு மம்தா தலைமை ஏற்க உமர் அப்துல்லா எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: