இதையடுத்து, அவர் மீது ஆத்தூர் போலீசில் புகார் தரப்பட்டு அதன் அடிப்படையில் அக்டோபர் 18ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி அமுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் வயதானவர். அவர் பேசியதால் பொது அமைதிக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. கூட்டம் நடந்து 25 நாட்களுக்கு பிறகே புகார் தரப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி மனுதாரர் மன்னிப்பு கோரிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், முதல்வர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மனுதாரர் பேசியுள்ளார். வழக்கு தொடர்வது தொடர்பாக உரிய அதிகாரிகளின் அனுமதி பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமீபத்தில் பேசிய நடிகை இதேபோல் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மிக மோசமாக பேசிவிட்டு அவரது பேச்சை நியாயப்படுத்தும் வகையில் புத்திசாலித்தனமாக மன்னிப்பு மனுவில் குறிப்பிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னிப்பு என்பது முழு மனதுடன் ேகட்கப்படவேண்டும். ஆனால் இந்த மனுவில் அப்படி மன்னிப்பு கேட்கப்படவில்லை. எனவே, மனுதாரரின் முன்ஜாமீன் மனு ஏற்கக்கூடியதல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
The post முதல்வர் குடும்பத்தினரை அவதூறாக பேசிய வழக்கு அதிமுக மகளிர் அணி நிர்வாகியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.