ஊட்டி : சென்னையில் நடக்கும் மலர்கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த தொட்டிகளில் தற்போது மலர்கள் பூத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிக்கின்றனர். இந்த மலர் கண்காட்சியின் போது, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை போன்று அங்கும் பல்வேறு வகையான மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்படுகின்றன.
இதற்காக, ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் மலர் தொட்டிகள் தயார் செயயப்பட்டு தொட்டிகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அலங்கரித்து வைக்கப்படுகின்றன.இதற்காக, கடந்த மாதம் முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் மரல் தொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த மலர் தொட்டிகளில் வைக்கப்பட்ட மலர் செடிகளில் மலர்கள் பூத்து காணப்படுகிறது.
குறிப்பாக, மேரி கோல்ட், பேன்சி, சைக்ளோமன், டெய்சி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் பூத்துவிட்டன. ெதாடர்ந்து, இந்த மலர் தொட்டிகைள பராமரிக்கும் பணியி்ல ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மழை மற்றும் பனியில் பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மலர் கண்காட்சி நடக்கும் தேதிகள் முடிவு செய்தவுடன், இங்கிருந்து சென்னைக்கு மலர் தொட்டிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
The post சென்னை மலர் கண்காட்சிக்காக தயார் செய்த தொட்டிகளில் மலர்கள் பூத்துள்ளன appeared first on Dinakaran.