இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்பு பேச்சு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: எம்பிக்கள் 55 பேர் கோரிக்கை கடிதம்

புதுடெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியான சேகர் யாதவ் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கபில் சிபல் உள்பட மொத்தம் 55 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை மாநிலங்களவை செயலாளரிடம் நேற்று வழங்கி உள்ளனர்.

அதில், ‘‘இஸ்லாமியர்களை இழிவாக பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கடிதத்தில் திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான வில்சன், முகமது அப்துல்லா, கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

The post இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்பு பேச்சு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: எம்பிக்கள் 55 பேர் கோரிக்கை கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: