இவர்களது உடல்கள் பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து அவரவது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கரிம்பனை கலையரங்கில் வைக்கப்பட்ட அவர்களது உடல்களுக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அமைச்சர்களான கே.கிருஷ்ணன்குட்டி, ராஜேஷ், மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.சித்ரா ஆகியோர் நேற்று மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, கரிம்பா அருகேயுள்ள துப்பநாடு ஜூமா மஜீத் பள்ளிவாசல் வளாகத்தில் நான்கு மாணவிகளின் உடல் அடக்கம் நடைபெற்றது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர் காசர்கோட்டைச் சேர்ந்த மகேந்திர பிரசாத், கிளீனர் வர்கீஸ் ஆகியோர் பாலக்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வர்கீஸுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
The post விபத்தில் இறந்த மாணவிகளுக்கு அஞ்சலி appeared first on Dinakaran.