அரசியல் சாசனத்தை போன்று, நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையிலே நமது நாட்டின் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதைபற்றி கண்டு கொள்ளாமல் பெண்களின் தாலி அறுக்கப்படும், எருமைகள் திருடப்படும் என்று தொடர்பு இல்லாத விஷயங்களை பற்றி ஆளும் பாஜவினர் பேசி வருகின்றனர். அத்தகைய நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும்.
ஒருவேளை ஒன்றிய அரசு இப்போது நாட்டுக்கு ஏதேனும் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால், அது பொருளாதாரக் கொள்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அது மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும். நாட்டின் வேலை வாய்ப்பை எடுத்து கொள்ளுங்கள். அதில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. தனியார் மயம் காரணமாக வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை மாற்றும் முயற்சியில் ஆளும் பாரதிய ஜனதா ஈடுபட்டு வருகிறது.
இதுவே மக்களவை தேர்தல் நடைபெறாமல் இருந்தால் இந்நேரம் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றியிருப்பார்கள். ஆனால் மக்கள் இந்த தேர்தலில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்துள்ளனர்” என்று இவ்வாறு அவர் பேசினார். மேலும் ஒன்றிய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்த பிரியங்கா காந்தி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை பார்த்தவாறு பாரதிய ஜனதா ஒரு வாஷிங் மெஷின் அரசு எனவும், மக்கள் பாஜவை பார்த்து சிரிக்கிறார்கள் எனவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரியங்கா காந்தி உரையை தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர்.
* என் உரையை விட சிறந்த உரை ராகுல் புகழாரம்
மக்களவையில் பிரியங்கா காந்தி பேசியது குறித்து அவரது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி புகழாரம் சூட்டி உள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரியங்கா காந்தியின் பேச்சு மிக அருமையான பேச்சு. என்னுடைய கன்னி பேச்சை விட பிரியங்காவின் பேச்சு மிக அற்புதம்” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
The post அரசியல் சாசனத்தை மாற்ற பாஜ முயற்சிக்கிறது: மக்களவையில் பிரியங்கா பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.